கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று முதல் தொடங்குகிறது. தகுதியான மாணவர்கள் அழைப்புக் கடிதத்தை தரவிறக்கம் செய்து கொண்டு, அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வுக்கு நேரில் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் அய்ந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு களுக்கு (பிவிஎஸ்சி- ஏ.எச் / பி.டெக்) 460 இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், 2019–2020-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 17 -இல் நிறைவடைந்தது. அதில், பி.வி.எஸ்சி.-ஏ.எச். படிப்புக்கு 15,666 மாணவர்களும், பி.டெக் படிப்புக்கு 2,772 மாணவர்களும் விண்ணப்பித்தி ருந்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் அண் மையில் வெளியிடப்பட்டது.

பி.வி.எஸ்சி. – ஏ.எச். படிப்பில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.ஸ்வாதியும் (கட்-ஆப் மதிப்பெண் – 199.50), பி.டெக் படிப்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜி.லட்சுமி பிரியதர்ஷினியும் (கட்-ஆப் மதிப்பெண் – 197.25) முதலிடத்தைப் பிடித்தனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இந்நிலையில், வரும் 25-ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று கால்நடை மருத் துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தக் கலந்தாய்வில், முதல் நாள் காலை 9 மணிக்கு சிறப்புப் பிரிவினருக் கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் நண்பகல் முதல் 27-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கால்நடை மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அழைப்புக் கடிதம் மற்றும் தரவரிசை விவரங்கள் ஆகியவற்றை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending