April 24, 2025, 10:49 PM
30.1 C
Chennai

நில அபகரிப்பும் திமுக.,வும்! ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…!

அசுரன் படத்தை பார்த்து பஞ்சமி நில மீட்புக்கு குரல் கொடுக்கும் சுடலை, அவரது கட்சியினர் பற்றி 2011 ல் அந்திமழை மின் இதழில் வந்த கட்டுரை.

நில அபகரிப்பும் திமுகவும்…- போகிற போக்கில்…
Posted : சனிக்கிழமை, ஆகஸ்ட் 20 , 2011 15:21:02 .

என் நிலத்தை மிரட்டி அபகரித்தார்கள் ,போலிபத்திரம் தயாரித்து எங்கள் நிலம் விற்பனை, எனது காகித ஆலை கபளிகரம் … நான் வாங்கிய ஓட்டல் அபகரிப்பு என்று கடந்த திமுக ஆட்சியில் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்திய நிலமோசடி , நில அபகரிப்பு புகார்கள் மாவட்டந்தோறும் ஆயிரக்கணக்கில் குவிந்தது .

அழகிரியின் இடது வலது கரம் இப்போது குண்டர்சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில், வீரபாண்டி ஆறுமுகம் முன்னாள் மூத்த அமைச்சர் அவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அவர் மீது நில அபகரிப்பு புகார் சொல்லபட்டது ஆளும் கட்சியின் அதிகார மையம் சேலத்தின் அதிகார வர்க்கம் என்று கொடி கட்டி பறந்த வீரபாண்டியார் இப்போது கம்பி எண்ணுகிறார் ஆட்சிமாறியது காட்சியும் மாறியது.

திருப்பூர் அருகே காகித ஆலை ஒன்றை அதன் உரிமையாளரை மிரட்டி வாங்கியதாக எழுந்த குற்றசாட்டின் அடிப்படையில் சேப்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் அன்பழகன் கைது.

திருச்சியில் உள்ள திமுக கட்சி அலுவலகம் நில அபகரிப்பு இடத்தில் கட்டியது என்ற பல்வேறு அபகரிப்பு புகார் காரணமாக முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு முன் ஜாமின் வாங்கி கைது நடவடிக்கையை தவிர்த்து இருக்கிறார்.முன் ஜாமின் எப்போது வேண்டுமானாலும் ரத்து ஆகும் நேரு எப்போது வேண்டுமானாலும் கைது செய்யபடலாம்.

வீரபாண்டி ஆறுமுகம் மகன் ஏ.ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீது நில அபகரிப்பு புகார்.திருநெல்வேலி மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சம்பந்தி கூட தனது சம்பந்தி மாவட்ட செயலாளார் என்ற அதிகார தெம்பில் வகுப்பு வாரியத்துக்கு சொந்தமான எண்பது கோடி பெறுமான நிலத்தை அபகரித்தார் என்ற குற்ற சாட்டு எழுந்துள்ளது. திமுகவினருக்கு அடுத்தபடியாக விடுதலை சிறுத்தைகள் மீதும் மாநிலம் முழுவதும் நில அபகரிப்பு மோசடி புகார் அதிகமாக வந்துள்ளது என்று காவல் துறை சொல்கிறது.

ALSO READ:  ஒரேயொரு செயல்திட்டம் - ஹிந்து மத ஒழிப்பு!

திமுக ஆட்சியில் இருந்த போதே அமைச்சராக என்.கே.பி .ராஜாவின் பதவி நில அபகரிப்பு விவகாரத்தில் பறிபோனது , கைது கூட செய்யபட்டார்.அப்போது திமுகவின் அதிகார துஷ்பிரயோகம் பற்றி அரசல் புரசலாக வந்த செய்திகள் இப்போது குவியும் புகார்கள் நிஜம் என்று உறுதிபடுத்தபட்டுள்ளது.

நில அபகரிப்பு புகார்களை கவனிக்க நடவடிக்கை எடுக்க காவல் துறையில் ஒரு தனிப்பிரிவே ஏற்படுத்தபட்டுள்ளது. விரைவில் தனி நீதிமன்றம் வேறு நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க வர இருக்கிறதாம்.கடந்த திமுக ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற நில விற்பனையில் பத்து சதவிகிதம் கூட உண்மையாக இருக்காது என்பதுதான் இப்போது கண்டுபிடிக்கபட்ட உண்மை.

ஒருவரை மிரட்டி அல்லது துன்புறுத்தி அல்லது அடித்து அவருக்கு சொந்தமான நிலத்தையோ வீட்டையோ வாங்குவது சட்டபடி குற்றம். ஆனால் இந்த குற்றம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது , நில அபகரிப்பு புகார் பற்றிய பிரச்சனையில் காவல் துறை மீது குற்றம் சுமத்தபட்டுள்ளது.மேற்கு மண்டல ஐ.ஜி. சிவணாண்டி மீது கூட நில அபகரிப்பு புகார்.ராஜாத்தி அம்மையார் கருணாநிதியின் துணைவியார் அவரது கணக்காளர் மீது நில அபகரிப்பு புகார் குவிந்துள்ளது , தற்போது அவர் சிறையில்.

இதேபோல் இந்த நில அபகரிப்பில் காவல் துறை பத்திர பதிவு துறைக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு போலிபத்திரம் தயாரிப்புக்கு இவர்கள் துணையில்லாமல் சாத்தியமாகாது.

திமுகவின் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது நடத்திய அத்துமீறலுக்கு இந்த நில அபகரிப்பு புகார்கள் ஒன்றே போதும். ஆனால் இது பழிவாங்கும் நடவடிக்கை என்று கருணாநிதி மாவட்டந்தோறும் போராட்டம் அறிவித்து இருக்கிறார்.

இப்போது நில அபகரிப்பு என்று புகார் மழை பொழிகிறவர்கள் திமுக ஆட்சிகாலத்திலும் காவல் துறை கதவை தட்டாமலா இருந்திருப்பார்கள் ? அப்போது சட்டபடி நடவடிக்கை எடுக்காமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போன காக்கி சட்டைகள் மீது என்ன நடவடிக்கை ?

ALSO READ:  சமஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்: அக்ஷி பாத்ர நியாய:

தனியார் நில அபகரிப்பு மட்டுமல்ல அரசுப் புறம்போக்கு நிலம் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை கூட ஆளும் கட்சி பிரமுகர்கள் அபகரித்து ரியல் எஸ்டேட் அதிபர்களாக அவதாரம் எடுத்தார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை.

அரசு இந்த நில அபகரிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் விஷயத்தில் இதை சட்ட ரீதியாக ஏமாற்று , மோசடி மிரட்டல் என்ற சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் , ஏன் எனில் பல நில ஆக்கிரமிப்பு வழக்குகள் சிவில் தாவா – சிவில் வழக்கு என்று முப்பது வருடம் நாற்பது வருடம் என்று நீதிமன்றத்தில் தூங்கி கொண்டு உண்மையான நில உரிமையாளருக்கு நீதி கிடைக்காமல் நில ஆக்கிரமிப்பாளார் அனுபவித்து கொண்டு வரும் ஆபத்து இருக்கிறது , ஏன் எனில் இது போன்று சிவில் வழக்கு நில அபகரிப்பாளார் களுக்குதான் சாதகமாக இருக்கிறது.

திமுக இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று திசை திருப்ப முயற்சிக்கிறது , ஆனால் நில அபகரிப்பு புகார்கள் இவ்வளவு பேர் தமிழகம் முழுவதும் குவிந்து இருப்பதில் அரசியல் பிண்ணனி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
அதே சமயம் நில அபகரிப்பு பற்றி கருத்து சொல்ல ஜெயலலிதாவிற்கு எந்த தகுதியும் இல்லை என்பதும் உண்மை.

அவரே அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி உச்சநீதிமன்றம் வரை இது சம்பந்தமான வழக்கு சென்று ஒரு கட்டத்தில் அவரே அந்த நிலத்தை மீண்டும் அரசிடம் திரும்ப ஒப்படைத்தார் வேறு வழியின்றி, இதே போல் ஜெயலலிதா மீது கூட நில அபகரிப்பு புகார் நிலுவையில் தான் இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் சிருதாவூரில் தலித் மக்களுக்கு தமிழக அரசால் வழங்கபட்ட நிலத்தை ஆக்கிரமித்து மாளிகை கட்டியதாக இப்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி ஒரு காலத்தில் குற்றம் சுமத்தியது.

சிருதாவூர் மாளிகை எனக்கு சொந்தமல்ல என்று சொன்ன ஜெயலலிதா அந்த மாளிகையில் பல நாள் தங்கினார் , திமுக ஆட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி தந்த புகாரின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கபட்டது.

ALSO READ:  பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

நிலம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக புகார் அளித்த நாற்பது பேரிடம் நீதிபதி சிவசுப்பிரமணியன் விசாரணை நடத்தி நிலத்திஅ விற்றது சட்டபடி செல்லாது என்று அந்த நிலத்தை மற்ற தலித் மக்களுக்கு பிரித்து கொடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டார் நீதிபதி.
ஆனால் அறிக்கை வெளியிட்டபின் உடனே திமுக அரசு அதனை செயல்படுத்தவில்லை அது ஏன் என்று தெரியவில்லை.

பரணி ரிசார்ட்ஸ் எனப்படும் நிறுவனத்தின் இயக்குனர்களாக ஜெயலலிதாவின் நிழல் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் சொந்தங்கள் இளவரசி சுதாகரன் இருக்கிறார்கள். நிலம் அபகரிப்பு இல்லை அவர்களாக விற்று இருக்கிறார்கள் , ஆனால் அரசு இலவசமாக தலித் மக்களுக்கு ஒதுக்கிய இடத்தை சட்டபடி இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யமுடியாது , பல கை மாறி சசிகலா சொந்தங்களின் கைக்கு வந்தது.

ஜெயலலிதாவிற்கும் சிருதாவூர் பங்களாவிற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் சட்ட விரோதமான இடத்தில் அவர் அடிக்கடி தங்கினார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நில அபகரிப்பு புகார் பற்றி திமுகவினரை கைது செய்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பும் ஜெயலலிதா சிருதாவூர் நிலத்தை தலித்களிடம் ஒப்படைத்து சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை நிருபிக்க வேண்டும் அதுதான் நியாயம்.

இதேபோல் கருணாநிதி நில அபகரிப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது, சட்டத்தின் முன் நில ஆக்கிரமிப்பாளர் நிறுத்தப்பட வேண்டும் … அவர்கள் குற்றவாளி என்றால் சட்டம் தண்டிக்கட்டும், நிரபராதி என்றால் அவர்களை நீதிபதியே விடுவிப்பார் , மடியில் கனம் இல்லை என்றால் கருணாநிதிக்கு இந்த பயம் தேவையில்லை.

  • பகிர்வு: ராஜேஷ் ராவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: ரோஹித் அதிரடியில் கைகொடுக்க மும்பை வெற்றி!

          மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர், இன்று நான்கு விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

Topics

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: ரோஹித் அதிரடியில் கைகொடுக்க மும்பை வெற்றி!

          மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர், இன்று நான்கு விக்கட்டுகள் எடுத்த ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories