நடிகை சமந்தா, ஞாயிற்றுக்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்திருந்தார். அவர் நடித்துள்ள சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்கள் செப்டம்பரில் திரைக்கு வரவுள்ள நிலையில், படங்கள் நன்றாகப் போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம். மேலும், சமந்தா நடித்துள்ள அநீதி கதைகள் படமும் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்திய சமந்தாவுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர். பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த சமந்தாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனால் திடீரென்று அந்தப் பகுதியில் பரபரப்பு கூடியது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமந்தா, திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் வழிபாடு நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.