
நர்சிங் கல்லுாரியில் படித்து வரும் மாணவி காதலனுடன் சேர்ந்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள தொரப்பாடி எனும் கிராமத்தை சேர்ந்தவா் சாந்தி (வயது 22)
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இப்பகுதிக்கு அருகே உள்ள கோட்டலாம்பட்டி என்னுமிடத்தில் மதன் (வயது 22)
இவர் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். சாந்தி மற்றும் மதன் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.பின்னா் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்துள்ளனா்.

இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது.
அவர்கள் இவர்களுடைய காதலுக்கு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் வெறுப்படைந்த காதலா்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ தான் இயலவில்லை, ஒன்றாக சாகவாவது செய்வோம் என்று இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி இருவரும் பணப்பாக்கம் ரயில்வேகேட் பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது அந்த வழியே சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் காதலா்கள் இருவரும் கைகளை ஒன்றாக கோர்த்தபடி கண்களை மூடிக்கொண்டு எதிரே வந்த விரைவு இரயில் முன் ஒன்றாக பாய்ந்துள்ளனர்.
இதில் இரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினா்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர்
இது குறித்து உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவம் அறிந்த காவல்துறையினர் ரயில்வே கேட் பகுதிக்கு விரைந்து வந்தனர்.
இரயிலில் அடிபட்டு பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.