செங்கோட்டை அடுத்த பெரியபிள்ளை வலசையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் முககவசம் மற்றும் கைஉறைகளை முன்னாள் பெரியபிள்ளைவலசை அதிமுக முன்னாள் செயலாளர் வேம்பு என்ற ரவி தன் சொந்த செலவில் வழங்கினார்.
நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேச ராஜா, தென்காசி ஒன்றியச் செயலாளர் சங்கரபாண்டியன் ஆலோசனையின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விஸ்வநாதபுரம் கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணியன். குருமுருகன். முருகையா, அருணாசலம். சுப்பையா முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.