செங்கோட்டை:
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரதான அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று 2 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை என்று விடுமுறையில் சுற்றுலா வந்த பயணிகளும், சபரிமலை செல்லும் பயணிகளும் அருவில் குளிக்க அனுமதிக்காததால் பெரும் ஏமாற்றம்ம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு:
பாபநாசம்:
43 மி.மீ
சேர்வலாறு:
8 மி.மீ
மணிமுத்தாறு:
3.6 மி.மீ
கடனா:
4 மி.மீ
ராமா நதி:
5 மி.மீ
கருப்பா நதி:
11 மி.மீ
குண்டாறு:
33 மி.மீ
நம்பியாறு:
2 மி.மீ
கொடுமுடி:
15 மி.மீ
அம்பாசமுத்திரம்:
4.6 மி.மீ
ஆய்குடி:
17.6 மி.மீ
சேரன்மகாதேவி:
2 மி.மீ
நாங்குநேரி:
5 மி.மீ
பாளையங்கோட்டை:
2 மி.மீ
ராதாபுரம்:
4 மி.மீ
சங்கரன்கோவில்:
2 மி.மீ
செங்கோட்டை:
27 மி.மீ
சிவகிரி:
11 மி.மீ
தென்காசி:
22.4 மி.மீ
நெல்லை :
1 மி.மீ
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (17-09-2017)
பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 78.60 அடி
நீர் வரத்து :723.12 கன அடி
வெளியேற்றம் :456 கனஅடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 66.27 அடி
நீர்வரத்து :893.40 கன அடி
வெளியேற்றம்:Nil
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 40.60 அடி
நீர் வரத்து : 98 கன அடி
வெளியேற்றம்: Nil