ksrthika
ksrthika

தமிழகத்தில் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணியான 29 வயது மருத்துவர் கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதற்குள் அடுத்தாக ஒரு கர்ப்பிணி மருத்துவர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பொதுவாக கொரோனா பலரையும் தாக்கி வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் கொரோனா யாரையாவது பாதிக்க தொடங்கி உள்ளது. கர்ப்பிணி பெண்கள் கொரோனாவிடம் இருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இன்று சென்னையில் கொரோனாவினால் மருத்தவர் கார்த்திகா இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending