சென்னை: தமிழக அரசின் 2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்செய்து பேசி வருகிறார் தமிழக நிதி அமைச்சரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், நெடுஞ்சாலைகளில் அரசின் டாச்மாக் மதுபானக்கடைகளை நீக்க வேண்டிய நீதிமன்ற உத்தரவின் கட்டாயத்தால், டாஸ்மாக் மதுபான கடைகளால் வரும் வருமானம் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தது…
2019-மார்ச்சில் தமிழக அரசின் கடன் ரூ 3,55,845 கோடியாக இருக்கும் -ஓ.பி.எஸ்.
தஞ்சை தமிழ் பல்கலை.யில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்பட்டு, ஆண்டு மானியமாக ரூ.2 கோடி வழங்கப்படும் – பன்னீர்செல்வம்.
அரசு ஊழியர் ஊதிய உயர்வால் ரூ14,719 கோடி செலவு
வேலையில்லா இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி
177 மீனவர்களுக்கு தலா ரூ20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மானியம், உதவித்தொகை ஒதுக்கீடு ரூ, 75,723 கோடி என தமிழக பட்ஜெட் அறிவிப்பு
மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ. 20,627 கோடியாக இருக்கும்.
2018-19 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக உயரும்
வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிப்பு
காவல்துறைக்கு ரூ.7,877 கோடி ஒதுக்கீடு
காவல்துறைக்காக 35 கட்டடங்கள், 15 காவல் நிலையங்கள், 543 குடியிருப்புகள் கட்டப்படும்.
வேளாண் துறைக்கு ரூ.8,916.25 கோடி ஒதுக்கீடு
வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.71 கோடி ஒதுக்கீடு.
26 மாவட்டங்களில் கிராமப்புற புத்தாக்கத் திட்டம் ரூ.920 கோடியில் செயல்படுத்தப்படும்;
வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.31 கோடி ஒதுக்கீடு
தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி ரூ.1500-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்வு
உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.269.82 கோடி ஒதுக்கீடு.
கடலூர், மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும்
நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் , கணிக்கப்பட்ட தொகையை விட டாஸ்மாக் வருவாய் 2017-2018 ஆம் ஆண்டில் சரிவு
2018 – 19 தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இல்லை.
நபார்டு வங்கி உதவியுடன், ரூ.200 கோடியில் 70 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்
2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்து கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
காவல்துறை உள்கட்டமைப்புக்காக ரூ.217 கோடி ஒதுக்கீடு:
இணைய வழி குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் இணைய வழி குற்றத்தடுப்பு காவல் நிலையம்
திறன் மேம்பாட்டு இயக்க நிதி ரூ.150 கோடியிலிருந்து ரூ.200 கோடியாக உயர்த்தப்படும்:
வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு திட்டம்
சுகாதாரத்துறைக்கு 11638.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு;
கால்நடை பராமரிப்புத்துறைக்கு 1,227.69 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
2018-19 ஆம் ஆண்டில் 10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறை மேற்கொள்ளப்படும்.