மயிலாடுதுறை: ராமர் படத்துக்கு அவமரியாதை செய்த பேராசிரியர் ஜெயராமன் மற்றும் குழுவினரைக் கண்டித்து மாயவரத்தில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
இது பெரியார் மண் அல்ல, ஆன்மீக பூமி எனக் காட்டும் விதமாக மயிலாடுதுறையில் முழு கடையடைப்பு நடத்தி, தி.க., பெ.தி.க., உள்ளிட்ட இயக்கங்களுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
காலை முதலே அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. நகரின் மிக முக்கியமான உணவகமான காளியாகுடி ஹோட்டல், மயூரா லாட்ஜ் முதல் சாதாரண வெற்றிலை பாக்குக் கடை உட்பட அனைத்தையும் அடைத்து தி.க.வினரின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான