ராமர் படத்துக்கு அவமரியாதை: இஸ்லாமியர் உள்பட வர்த்தகர் கடையடைப்பால் வெறிச்சோடிய மாயவரம்!

Published:

IMG 20180323 WA0031 e1521794995418 - 2026

மயிலாடுதுறை: ராமர் படத்துக்கு அவமரியாதை செய்த பேராசிரியர் ஜெயராமன் மற்றும் குழுவினரைக் கண்டித்து மாயவரத்தில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.

இது பெரியார் மண் அல்ல, ஆன்மீக பூமி  எனக் காட்டும் விதமாக  மயிலாடுதுறையில் முழு கடையடைப்பு நடத்தி, தி.க., பெ.தி.க., உள்ளிட்ட இயக்கங்களுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

காலை முதலே அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. நகரின் மிக முக்கியமான உணவகமான காளியாகுடி ஹோட்டல், மயூரா லாட்ஜ் முதல் சாதாரண வெற்றிலை பாக்குக் கடை உட்பட அனைத்தையும் அடைத்து தி.க.வினரின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பொது மக்கள் வெளிப்படுத்தினர்.

நகரில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் கடைகள், வர்த்தக நிறுவனங்களையும் அடைத்து தங்கள் ஆதரவை அளித்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img