Bandh
Bandh

நாளை கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ள கடையடைப்பில், இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்து கொள்ளாது, கடைகள் திறந்திருக்கும் என்று அந்த சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணி அமைப்பின் மாநிலத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் வெளியிட அறிக்கை :

கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ள பந்தில் இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கும் போல் கடைகள் திறந்திருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்..

கம்யூனிஸ்ட் கட்சியினர் நாளை (27ஆம் தேதி) அறிவித்துள்ள பந்த் மக்கள் விரோதாமானது. இதனை காரணம் காட்டி வியாபாரிகள் சங்கள் சில கடைகளை அடைக்க கூறி வற்புறுத்துவதாக தெரிகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறை மக்களை அச்சுறுத்தி செய்யும் இதுபோன்ற கடையடைப்பை தடுக்க வேண்டும். இது ஜனநாயக விரோதமானது. இந்த கடையடைப்பில் இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்துகொள்ளாது. எங்கள் சங்கத்தின் கடைகள் வழக்கமாக திறந்து வியாபாரம் நடைபெறும்.

கொரானா ஊடங்கால் ஒட்டுமொத்த உலகமே முடங்கி அல்லல் பட்டது. இந்நிலையில் போர்கால அடிப்படையில் தடுப்பூசி போட்டு, நோய் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. தேவையான அளவு தடுப்பூசியை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக அனுப்பி வருகிறது. இதே தடுப்பூசிக்கு எதிராகவும், மக்களை குழப்பும் வகையிலும் கருத்துக்களைக் கூறியது கம்யூனிச, திராவிட அமைப்புகள் தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே, முதலிலேயே மத்திய அரசுடன் ஒத்துழைத்திருந்தால் இன்னும் சில மாதங்களுக்கு முன்னரே கூட நோய் தொற்று குறைந்து, மாநிலம் சகஜ நிலைக்கு திரும்பியிருக்கும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

பண்டிகை காலம் ஆரம்பிக்கும் நேரத்தில் இதுபோன்ற பந்த் அறிவிப்பது ஒவ்வொரு சமயத்திலும் இடதுசாரிகளால் நடத்தப்படும் நாடகம். இதனால் மக்களும், வியாபாரிகளும் இன்னலுக்கு உள்ளாவார்கள். இவர்கள் அரசியல் நடத்த மக்களை இம்சிப்பது ஜனநாயக விரோதாமனது.

சில மாவட்டங்களில் ஆட்டோவில் நாளைய பந்த் பற்றிய அறிவிப்பு செய்வதாக தகவல் தெரிகிறது. மக்களை அச்சுறுத்தும் ஜனநாயக விரோத போக்கை காவல்துறை தடுக்க வேண்டும்.

எனவே, 27.9.2021 அன்று அறிவித்துள்ள பாரத் பந்தில் இந்து வியாபாரிகள் நல சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கம் போல் எங்களது உறுப்பினர்களின் கடைகள் திறந்து வியாபாரம் நடத்துவோம். வியாபாரிகளுக்குத் தக்க பாதுகாப்பும், ஒத்துழைப்பும் காவல்துறையும், தமிழக அரசும் வழங்கும் என நம்புகிறோம்… என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending