திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ளப்படும் தண்டவாள பராமரிப்பு பணியால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், இன்றும், நாளையும் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. அந்த இரு நாட்கள், கோவை – சேலம் பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்படுகிறது.
இன்று கோவை – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், ஒரு மணி நேரம், 40 நிமிடம் தாமதமாக, கோவையிலிருந்து புறப்படும். அதேபோல், கோவை – சென்னை சென்ட்ரல் சதாப்தி ரயில், 90 நிமிடம்; எர்ணாகுளம் – பீஹார் சூப்பர்பாஸ்ட், 90 நிமிடம்; மங்களூரு – சென்னை எழும்பூர் ரயில், 70 நிமிடம்; திருவனந்தபுரம் – ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், 35 நிமிடம் தாமதமாக, கோவையிலிருந்து புறப்படும். பாலக்காடு – ஈரோடு பாசஞ்சர் ரயில், 35 நிமிடம் தாமதமாக, வஞ்சிப்பாளையத்திலிருந்து புறப்படும். அதேபோல், ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயில், 60 நிமிடம் தாமதமாக; எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில், 30 நிமிடம்; கோவை – சென்னை சென்ட்ரல் ரயில், 70 நிமிடம்; கோவை – சென்னை சதாப்தி விரைவு ரயில், 80 நிமிடம் தாமதமாக, கோவையிலிருந்து புறப்படும். பெங்களூரு – எர்ணாகுளம் விரைவு ரயில், ஓமலூரிலிருந்து, 15 நிமிடம், சேலத்தில், 30, சங்ககிரியில், 15, ஈரோட்டில், 40 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் – கோவை விரைவு ரயில், ஜோலார்பேட்டையில், 30 நிமிடம், மொரப்பூரில், 10, சேலம், 30, ஈரோட்டில், 20 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் – கோவை சதாப்தி விரைவு ரயில், ஜோலார்பேட்டையில், 30 நிமிடம், மொரப்பூரில், 10, சேலத்தில், 20 நிமிடம், ஈரோட்டில், 20 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



