thirumavalavan vck meeting - 2026

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் திருமாவளவன். அப்போது, பொதுகூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களுக்கு இடையே அடிதடி ரகளை ஏற்பட்டதை அடுத்து, கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சை பாதியில் முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார்.

மதச்சார்பின்மையை ஆதரித்தும், மதவாத சக்திகளை எதிர்த்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாமகிரிப் பேட்டையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

அவர் பேசிக் கொண்டிருந்தபோது, தொண்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அடங்க மறுத்து அத்துமீறி, திமிறி எழுந்து, ஒருவரை ஒருவர் திருப்பித் தாக்கிக் கொண்டனர். இதனால் கடுப்பான திருமாவளவன், தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending