r b udhayakumar - 2026

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு திருப்பதி வந்திருந்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளள. சில தீய சக்திகள் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளைப் பரப்பி மக்களை தூண்டி விடுகின்றனர் என்று குற்றம் சாட்டினார் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மேலும், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால்தான், அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்று விளக்கம் அளித்த உதயகுமார், அங்கு இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரமானது அல்ல என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending