06 May 11 Tamil - 2026

சென்னை: தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை ‘வாட்ஸ் ஆப்’பில் தரக்குறைவாக திட்டித் தீர்த்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.   அந்தக் கருத்தை தரக்குறைவாக விமர்சித்து தமிழிசையை திட்டித் தீர்த்து வீடியோ பதிவு ஒன்றை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டார் பெண் ஒருவர்.

இந்த  வீடியோ பதிவு தொடர்பாக, அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக., நிர்வாகிகள் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், சம்பந்தப் பட்ட வீடியோ பதிவு குறித்து விசாரித்து வந்தனர்.

இதை அடுத்து, வீடியோ பதிவில் பேசியவர் திருச்சியைச் சேர்ந்த சூர்யாதேவி (24) என்று தெரியவந்தது. இதையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் தங்கியிருந்த சூரியாதேவியை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

One response to “தமிழிசையை வாட்ஸ்அப்பில் தரக்குறைவாக விமர்சித்த பெண் கைது!”

  1. சாதிக்கொரு நீதி யும் ஆளுக்கொரு நீதியும் வழங்குவதே நம் நாடு. பெண்களையும் ஊடகத்தினரையும் மிக மிக இழிவாகப் பேசிய நடிகர் சேகரை இதுவரையும் கைது செய்யவில்லை. அவர் மத்திய அமைச்சர் , தலைமை அமைச்சர், தலைமைச் செயலர் முதலானவர்களைச் சந்தித்து உலா வந்து காெண்டுள்ளார். ஆனால், திருச்சிராப்பள்ளி சூரியாதேவியை உடனே கைது செய்துள்ளனர். இப்படி யெல்லாம் கேள்வி கேட்பார்கள் என்ற சிந்தனைகூட இல்லாத காவல்துறை; இருந்திருந்தால் இவரையும் கைது செய்திருக்க மாட்டார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending