சென்னை: ஆளுநர் மாளிகைக்கு ஃபர்னிச்சர் வாங்கியதில் ரூ.10 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, அடையாறில் உள்ள சேட் பர்னிஷிங் கடையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக போர்வைகள், தலையணை உறைகள், மெத்தை உறைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இதில், வழங்கப்படாத பொருட்களுக்கு போலி ரசீதுகளைக் கொடுத்து பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்ததை அடுத்து, பர்னிச்சர் கடையின் உரிமையாளர் முகமது யூனுஸ் சேட், ஆளுநர் மாளிகை ஊழியர்களான ராஜேஷ், ஜஸ்டின் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை கணக்காளர் சிவகுமார், உதவி கணக்காளர் குப்புசாமி ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ARE ALL THE PEOPLE IN TN DISHONEST AND CORRUPTED ?? THERE IS CORRUPTION EVERYWHERE IN TN.