தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக மே 22ல் நடந்த நுாறாவது நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு தூத்துக்குடி வந்த நடிகர் விஜய் , துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் வழங்கினார்.