குற்றாலத்தில் நெல்லை கலெக்டர் திடீர் ஆய்வு!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு நடக்க இருக்கும் சாரல் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முன்னோடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் ஷில்பா சதிஷ் பிரபாகர் இன்று குற்றாலம் வந்தார்.

கூட்டத்துக்கு முன்னதாக குற்றாலம், ஐந்தருவி, பழையக்குற்றாலம், புலியருவி பகுதிகளில் சென்று சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் பழனி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் செளந்திரராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.