சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸும் நடிகர் விஜயும் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களிடம் கோடி கோடியாக பணம் வாங்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டிய பாமக., நிறுவனர் ராமதாஸ், தான் மட்டும் பழைய ராமதாஸாக இருந்திருந்தால், சர்க்கார் படம் எந்த திரையரங்கிலும் ஓடாது என்று கூறினார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக.,வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசினார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.
அப்போது அவர், சர்கார் திரைப்பட விளம்பரத்தில் நடிகர் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டரைப் பார்த்ததும் எனக்கு கடும் கோபம் வந்தது. நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால் சர்க்கார் திரைப்படம் எந்த திரையரங்கிலும் ஓட முடியாதபடி தொண்டர்களுக்கு உத்த