கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பியவர்கள் முதல்வரை சந்தித்து பாராட்டு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள், சிமிகோட் பகுதியில் பனி, மழையில் சிக்கிக் கொண்டனர். திரும்ப வழியிலாமல் தவித்த நிலையில், இந்திய அரசின் துரித நடவடிக்கைகளும், தமிழக அரசின் வேண்டுகோளுமாக அவர்களைக் காத்து ஊர் திரும்ப உதவின. இதனை அடுத்து, ஊர் திரும்பியவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கைலாஷ் மானசரோவருக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்ற யாத்திரிகர்கள், மோசமான பருவநிலை காரணமாக, நேபாளத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும், துரித நடவடிக்கை எடுத்து,பாதுகாப்புடன் மீட்க உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர்