income - 2026

புது தில்லி: வரும் ஜூலை 31 க்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வருமான வரித்துறை கூறியிருப்பது…

வருமான வரியை வரும் ஜூலை 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நேரிலும் தாக்கல் செய்யலாம். வரும் திங்கள் கிழமை ஜூலை 16 முதல் கவுன்டர்கள் செயல்படும். உரிய காலத்தில் வருமான வரியை தாக்கல் செய்யத் தவறுவோருக்கு ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் எனில் ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர் எனில் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

2018- 19க்கான வருமான வரியை 31.03.19 க்கு பின்னர் தாக்கல் செய்ய முடியாது. வருமான வரியில் திருத்தம் செய்ய வரும் 2019 மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending