சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கர்நாடகத்தின் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து நீர் அதிகளவில் வெளியேற்றப் பட்டு வருகிறது. கபினியில் இருந்து விநாடிக்கு 14,583 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 47,816 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது. இதை அடுத்து ஒகேனக்கலில் நீர்வரத்து விநாடிக்கு 66 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 114.63 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 64,595 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. அணையில் நீர் இருப்பு 85.16 ஆக உள்ளது.