சென்னை: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுப் பரிசாக, கடந்த வருடம் திட்டமிட்ட இருளர் மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தின் முதற்படியாக 11 வீடுகள் ஒப்படைக்கப் பட்டன.
ஞாயிற்றுக் கிழமை, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துகோட்டை விடுதலைநகர் இருளர் மக்கள் 11 பேருக்கு முறைப்படி வீடுகளை ஒப்படைத்து கௌரவித்தார்.
சதுர்வேதி சுவாமிகளால் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டில் 1000 வீடுகள் ஏழைகளுக்காக கட்டித் தருவது என முடிவெடுத்து அதற்கான துவக்க விழா ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த விழாவில் 11 இருளர் மக்களுக்கு வீடுகள் வழங்கப் பட்டன.
ஆஹா வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯.நலà¯à®² விஷயம௠தொடரடà¯à®Ÿà¯à®®à¯ உஙà¯à®•ள௠பணி