இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதைக் காண முடிகிறது. வாகன ஓட்டிகள் மட்டும் அல்லாமல், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணியுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! என்று எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் சென்னையில் விதிமீறல் தொடர்பாக 78 ஆயிரம் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில் 9,200 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீதானவையாம்!