வியாழக்கிழமை இன்று காலை பாளை மேரி சார்ஜன்ட் பள்ளி எதிரே உள்ள பெட்ரோல் பல்க்கில் ஊழியரின் கவனக்குறைவால் பெட்ரோல் போடும்போது சிந்தியதால் 19 வயது இளைஞர் மீது தீப்பிடித்து உயிர் ஊசலாடுகிறது. இதை அடுத்து பெட்ரோல் பங்க் மூடப் பட்டது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிய போது இருசக்கர வாகனத்தில் தீபிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
பாளைங்கோட்டை காவலர்குடியிருப்பைச் சேர்ந்த ஆல்வின், இன்று காலை ஊசிகோபுரம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பினார். அப்போது, பெட்ரோல் டேங்க் நிரம்பியுள்ளது. இதனால் பெட்ரோல் வெளியே வழிந்துள்ளது. இதை அடுத்து பங்க் ஊழியர் பெட்ரோல் பம்பை வேகமாக எடுத்துள்ளார். அதில் இரு சக்கர வாகனம் மற்றும் ஆல்வின் மீது பெட்ரோல் சிந்தியுள்ளது. இதனை கவனிக்காத ஆல்வின் இரு சக்கர வாகனத்தை இயக்கிய போது திடீரென தீப்பற்றிக் கொண்டது.
அலறிய ஆல்வின் வண்டியைக் கீழேபோட்டுவிட்டு, குதித்தார். அருகில் இருந்தவர்கள் செய்வதறியாது ஒரு நிமிடம் திகைத்தனர். உடனே தீயணைப்புக் கருவியைக் கொண்டு வந்து, பைக் மீது பாய்ச்சி தீயை அணைத்தனர். இதில் அவரது பைக் எரிந்தது. ஆல்வின் காயமடைந்தார்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் பெட்ரோல் பங்க் உடனடியாக மூடப் பட்டது. இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்த சிசிடிவி காட்சி காணொளி…