சென்னை: போலீஸார் கூட ஹெல்டெட் அணிந்து செல்வதில்லை என்று உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கட்டாய ஹெல்மேட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது இதுவரை தொடரப்பட்ட வழக்குகள், வசூலித்த அபராதம் குறித்த அறிக்கை, போக்குவரத்து போலீசார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு முறையாக செயல் படுத்தவில்லை அதிருப்தி தெரிவித்தனர். மேலும் போலீசார் கூட இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து செல்வதில்லை. காரில் செல்லும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட சீட் பெல்ட் அணிவதில்லை! அரசு உருவாக்கும் சட்டத்தில் உள்ளதையே அமல்படுத்த சொல்கிறோம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.