December 7, 2024, 5:34 PM
28.4 C
Chennai

தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு!

அண்மையில் தாமிரபரணி மகா புஷ்கர விழா பன்னிரெண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தாமிரபரணி ஆற்றைப் பற்றி மிக அழகாக பாடலைப் பாடியிருந்தார் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த +2 படிக்கும் மாணவி பூர்வஜா.

பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாணவி பூர்வஜாவின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.