thukku - 2026

திருமணமான 6மாதத்தில் கா்ப்பிணிபெண் தற்கொலை …!

திருவள்ளுா் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமாகி 6 மாதங்களே ஆன கர்ப்பிணி பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளுா் மாவட்டம் பாடியநல்லுாரை சோ்ந்தவா் ஆறுமுகம் இவா் அரசு போக்குவரத்து துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகள் சசிகலாவை(24) பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் வ.உ.சி நகரை சோ்ந்த கணேசன்(32) என்பவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.

கணேசன் எண்ணுார் துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளாராக வேலைபார்த்து வருகிறார். மேலும் இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் சசிகலா இரண்டுமாத கா்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்ற கணேசன் இன்று காலை வீடு திரும்பி உள்ளார். வீட்டின் படுக்கை அறையில் சசிகலா துாக்கில் தொங்கிபடி இறந்த நிலையில் கிடந்தது.  கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இதனையடுத்து அங்கு விரைந்த வந்த போலீஸார் சசிகலாவின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். தகவல் அறிந்து பொன்னேரி கோட்டாட்சியா் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சசிகலாவின் தாய்,தந்தை, கணவர் கணேசன் மற்றும் உறவினா்களிடம் விசாரணை செய்தார்

பின்னர் இதுகுறித்து அவா் கூறும்போது சசிகலாவின் இறப்பு குறித்த தகவல் உடல்கூறு ஆய்வுக்கு பிறகே உறுதியாக தெரியவரும் அதனைதொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை   இருக்கும் என தெரிவித்தார்.

திருமணமாகி 6மாதங்களே ஆன நிலையில் கா்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending