motercycil - 2026

சென்னை பெரம்பூர் மாதவரம் பால்பண்னை பகுதியை சேர்ந்தவா் சசிகுமார், அவருடன்  தண்டையார் பேட்டை நேதாஜி நகர பகுதியை சேர்ந்தவா் சையதுஜமீம்அன்சாரி இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஓரே மோட்டார் சைக்கிளில் வியாசர்பாடி எருக்கஞ்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் அசுர வேகத்தில் வந்த கண்டெயினர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவரின் மீது பயங்கரமாக மோதியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனா்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மோதலில் இறந்த இருவரின் உடல்களை கைப்பற்றி உடல்கூறி ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் கொடுங்கையூர் பகுதி என்எஸ்கே சாலையை சோ்ந்த சர்தார்(56) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதனை தொடரந்து மற்றொரு சம்பவம்:

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (55). இவரது மகன் மோகன்ராஜ் (27). இவர்கள் இருவரும் நேற்று மதியம் கோயம்பேடு சென்றுவிட்டு மோட்டர சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

மோட்டர சைக்கிள் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் வந்தபோது அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் மோட்டர் சைக்கிள் ஏறி இறங்கியது இதில் மோட்டர் சைக்கிளில் பின்னால் அமா்ந்திருந்த சந்திரா நிலைதடுமாறி துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

இதனால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக இறந்தார். மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்த மகன் மோகன்ராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக வந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சந்திராவின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending