kanyakumari - 2026

தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ., தோல்வி அடைய செய்ததில் வெற்றி பெற்றுள்ளதாக கிறிஸ்தவ பேரவை புலகாங்கிதம் அடைந்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் காங்கிரஸ் அதிக தொகுதிகளை பிடித்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட குமரி தொகுதியில் அவரை தோற்கடிக்க வைக்க வேண்டும் என சில மத சார்பு அமைப்பினர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உள்ளடி வேலை பார்த்ததாக பேசப்பட்டது.

இந்த விஷயம் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குமரி தொகுதியில் பா.ஜ., தோல்வியை தழுவியதை சில கிறிஸ்தவ அமைப்புகள் கொண்டாடி வருகின்றன.

மேலும் பாராட்டு விழாவும் எடுத்து வருகிறது. இது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பினர் ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளனர். அந்த அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் கூறியிருப்பதாவது:

ALSO READ:  தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

நடந்து முடிந்த தேர்தல் குமரி மண்ணில் இருந்து பாசிச சக்திகளை விரட்டி அடிக்கும் பணியில் நாம் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம்.

இதற்கு முக்கிய காரணம் நமது பேரவையே என்பது உண்மை. இதற்கென உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக வரும் 5ம் தேதி தக்கலையில் செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அனைவரும் வருமாறு கேட்டு கொள்கிறோம். மேலும் எதிர்கால திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending