senthilkumar malaimurasu reporter - 2026

டிப்பர் லாரி மோதி சென்னையில் செய்தியாளர் செந்தில்குமார் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை வண்டலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்கச் சென்றார், மாலைமுரசு டிவி.,யில் செய்தியாளராகப் பணி புரியும் செந்தில்குமார். செல்லும் வழியில் டிப்பர் லாரி மோதி, சாலைவிபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள், பத்திரிகையாளர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

சன்.டிவி தொலைக்காட்சி நிருபர் ஜெய்சங்கரின் மாலைமுரசு தொலைக்காட்சியின் செய்தியாளருமான செந்தில்குமார் இருசக்கர வாகனத்தில் செய்தி சேகரிக்க சென்று கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மோதி இன்று மதியம் அகால மரணமடைந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், திருவள்ளூர் மாவட்டம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.. என்று இரங்கல் செய்தியை வெளியிட்டது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.

மாலை முரசு தொலைகாட்சி செய்தியாளர் செந்தில்குமார் மரணம் தொடர்பில், சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்….

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

மாலைமுரசு தொலைகாட்சி தாம்பரம் செய்தியாளர் செந்தில்குமார் (38 ) வண்டலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  செல்லும் வழியில் அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் செய்தியாளர் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் பலியான செந்தில் குமார் திருமணமானவர். அவரது மனைவி .11 வயதில் ஒரு மகன், 8 வயதில் ஒரு மகள் என அவரது குடும்பம் கதிகலங்கி நிற்கிறது.
விபத்தில் செய்தியாளர் பலியான சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது .

செந்தில்குமாரின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது . மறைந்த செய்தியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் நிதி உதவி வழங்கிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள் விடுக்கிறது.  செய்தியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் செய்வோம். துணை நிற்போம். துயரத்தில் பங்கேற்போம். முகவரி: 48, சுந்தரேசன் சாலை அம்பேத்கர் நகர், கல்லுக்குட்டை பெருங்குடி. சென்னை.  – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending