dmk nalvar - 2026

தி.மு.க ஆட்சியில் மத்திய கூட்டுறவு வங்கியில், 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 2006-2007ஆம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த வங்கியின் கிளைகளில் 100 கோடி ரூபாய் வரை திமுகவினர் ஊழல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் போரூர், திருவொற்றியூர், பல்லாவரம், அம்பத்தூர் ஆகியவற்றில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், பொதுமக்களின் சேமிப்பு நிதி, நிரந்தர வைப்பு நிதி, நகைக்கடன், மகளிர் மேம்பாட்டு நிதியில் இருந்து திமுகவினர் ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் செய்த இந்த ஊழலால் வாடிக்கையாளர்களுக்கு வட்டிப் பணம், பங்கு லாபத்தொகை வழங்க முடியாத நிலையில் வங்கிக்கிளைகள் உள்ளன. திமுக.,வினரின் மெகா ஊழல் தொடர்பாக, சிறப்பு அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட குழு விசாரித்தது.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

இந்த விசாரணையில்,  2010 ஏப்ரல் 13ல், 333 பக்கங்கள் கொண்ட உண்மை கண்டறியும் அறிக்கையை விசாரணைக்குழு தாக்கல் செய்தது.

இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளான எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஆவணங்களை மாற்றி அமைத்தல் போன்ற திமுகவினரின் செயல்களால், மத்திய கூட்டுறவு வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதனால் வங்கிக் கணக்கு உள்ளவர்களுக்கு வட்டித் தொகை மற்றும் லாபத் தொகை ஆகியவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending