BAM PELS 1 - 2026திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளி வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது .

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மேல்மனம்பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2016-ல் தங்கராஜை ராஜேஷ் தரப்பைச் சேர்ந்தவர்கள் மேல்மனம்பேடு கிராமத்தில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

அதனையடுத்து தங்கராஜின் சகோதரர் வெங்கட்ராமனை கடந்த 2018-ம் ஆண்டு அவரது வீட்டிற்குள் ராஜேஷ் தரப்பினர் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் .

அப்போது இந்த வழக்கில் ராஜேஷ், தினேஷ், வீரா, இளங்கோ, கவிக்குமார் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தருமன், ஸ்டீபன்ராஜ், இளங்கோ, கவிக்குமார் உள்ளிட்ட 8 பேர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

பின்னர் அவர்கள் 8பேரும் தினமும் , வெள்ளவேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தள்ளனா்.

இந்நிலையில் தருமன் உள்பட 7 பேர் வெள்ளவேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தனர்.

பின்னர் அவர்கள் மேல்மனம்பேடு கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று திடீரென நாட்டு வெடிகுண்டை 7 பேர் மீது வீசிவிட்டு தப்பி ஓடி விட்டனா்.

இந்த தாக்குதலில் தருமன் பலத்த காயம் அடைந்தார். மற்றவா்கள் லேசான காயத்துடன் தப்பினர். கயம் அடைந்த தருமன் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் சம்பந்த பட்ட 4 பேரை பிடித்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending