கார்ரேஸ் மன்னன் அஜித்தின் குழு வடிவமைத்த ஏர்டாக்ஸியில் ஜெயக்குமார்!

சென்னை தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல் வணிகம்
jayakumar in drone - 2026

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அஜித்குமாரை தொழில்நுட்ப வழிகாட்டியாகக் கொண்ட தக்ஷா மாணவர் குழு ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை ஆம்புலன்ஸ் சேவைக்காக தயாரித்து காட்சிப் படுத்தியது.

மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக இதன் மூலம் கொண்டு சேர்க்க முடியும். உடல் உறுப்பு தானத்துக்கு உதவும் வகையிலும் இந்த ஏர்டாக்சி வடிவமைக்கப்பட்டது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் போது, காட்சிப் படுத்தப் பட்டிருந்தது இந்த ஏர் டாக்ஸி.

இந்த மாநாட்டுக்கு வந்த முதலீட்டாளர்களை வெகுவாகக் கவர்ந்தது இந்த ஏர் டாக்ஸி. இந்நிலையில் அங்கே வந்திருந்த அமைச்சர் ஜெயகுமாரும் இந்த டாக்ஸியின் வடிவமைப்பில் ஈர்க்கப்பட்டு, அதனுள் சென்று அமர்ந்தார். பின்னர்,. மாணவர்களிடம் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், சமுதாய நல நோக்கில் இதனை உருவாக்கிய நடிகர் அஜித்குமார் மற்றும் தக்‌ஷா குழுவினரை வெகுவாக பாராட்டினார் ஜெயக்குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.