பழநி: பழநி பங்குனி உத்திர விழா சனிக்கிழமை இன்று மார்ச் 24 துவங்கியது. இன்று முதல் ஏப்.2ஆம் தேதி வரை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு, முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் திருவீதியுலா வருகிறார். மேலும் வெள்ளி காமதேனு, தங்கமயில் வாகனத்தில் மலை வீதியில் உலா வருகிறார். மார்ச் 30ஆம் தேதி அன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது.