இவர்தான்… மாவட்ட ஆட்சியர்… ஷில்பா பிரபாகர் சதீஷ். கீழே கொடுக்கப் பட்டுள்ள காணொளியைக் கண்டால், ஆட்சியர் முன்வைக்கும் வினாக்கள், கலவரச் சூழலுக்கு என்ன காரணம், யார் கலவரத்தைத் தூண்டியது, ஏன் இது போல் ஆனது என்ற பல விவரங்கள் தெரியவரும்.
செங்கோட்டை கலவரச் சூழலில், இஸ்லாமிய மக்களிடையே பேசும் போது, ஆட்சியர் முன்வைக்கும் வினாக்கள்…
* உங்ககிட்ட 3 மணி நேரம் பேசியிருக்கறதும் இதான்… அதுக்கு ஒரு காரணம் இருக்கு…
* ஊர்வலத்தை வேற வழியில் கொண்டு போயிருந்தாலும்.. இதேதான் நடந்திருக்கும்…
* நம்ம மக்கள் எல்லா இடத்திலயும் இருக்காங்க இல்ல… இந்த தெருவ விட்டு வேற எந்த தெருவுலயும் உங்க மக்கள் இல்லியா?
* நான் இங்க இருந்து போனப்புறம் கூட இந்த ஊர் அமைதியா இருக்கணும் சார்.
* யாரு எங்க கல்லடிச்சாங்கன்னு நமக்கு தெரியும் சார்… எங்க கிட்ட ரெகார்ட் இருக்கு சார்… நாளக்கி காட்டுறேன் சார்…
* (நான் கல்லெறிஞ்சா கூட பிடிங்க… என்ற இந்த நபரின் வேண்டுகோளுக்கு ஆட்சியர் பதில்…) எக்ஸாக்ட்லி சார்…
* கலவரக்காரர்கள் யார் யாரு எந்த சைடுல இருக்காங்கன்னு நமக்கு தெரியும் சார். அதான் பிரச்னையே! நாங்க பாத்துக்கறோம். ஒரு 2 மணி நேரம் அமைதியா இருங்க…
* முதல்ல யார் உயிருக்கும் எதுவும் ஆகிடக்கூடாது. ரெண்டாவது பசங்க சின்ன பசங்க.. எஃப்.ஐ.ஆர்., போட்டா நாளைக்கு அவங்க எதிர்காலம் வீணாயிடும். அதனால நாம அமைதியா இருக்கணும்.
* (வாபஸ் வாங்குறதா இந்த நபர் சொல்கிறார்.) நீங்க பேசப் பேச இன்னும் அதிகம் ஆகும்…
(எங்க உணர்வு.. எங்க உணர்வு.என்கிறார் அந்த நபர்… )
* நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணல.
* நமக்கு தெரியும்… இது வேணும்னே பண்ணும் போதே நாம என்ன சொன்னாலும் அது அதிகமாகத்தான் போகும்.
* (அப்புறம் ஏன் பெர்மிஷன் கொடுக்கணும் என்று கேட்கிறார் இவர்…. அதாவது பாரம்பரியமா போகும் ஊர்வலப் பாதைக்கு ஏன் அனுமதி கொடுக்கணும்னு கேட்கிறார்…) பெர்மிஷன் கொடுக்கலைன்னா… இன்னும் அதிகமா பிரச்னை ஆகிடும் (என்கிறார் ஆட்சியர்.)
* (சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி ரத்து பண்ணக் கூடிய ப்ரோக்ராம் நிறைய இருக்கு… – என்கிறார். அதாவது, இப்போது பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. விநாயகர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வன்முறை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினால், இந்த ஊர்வலத்தை ரத்து செய்து விடுவார்கள் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. அதைத் தான் தொடக்கத்தில் இருந்தே இவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். .. இதற்கு ஆட்சியரின் பதில்… – ) இது உங்க ஜட்ஜ்மெண்ட்.. (என்பது). அதற்கு அந்த நபர், ஜட்ஜ்மெண்ட் இல்ல… நடைமுறையில பார்க்கிறோம்…
(அதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினால், நிகழ்ச்சி ரத்தாகிவிடும் என்பது நடைமுறையில் பார்ப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நெஞ்சில் உரம் போல் பதிந்திருக்கிறது…)
* அப்ப நாங்க யாருமே யோசிக்காம இந்த முடிவு பண்ணியிருக்கோமா? நானே பண்ணியிருக்கேனுல்ல. இங்க பண்ண முடியலைன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்ல்ல. இந்த வருசம்.. இந்த ஒரு இடம்.. நாம போற இடங்கள்ல சார்.. இந்த ஒரு மாவட்டம் அமைதியா இருக்கு… நாங்க இரிட்டேட் பண்ண விரும்பல…
(நாங்க ரொம்ப வருத்தப் படுவோம்… அதாவது ஊர்வலத்தை அனுமதித்தால்.. நாங்க ரொம்ப வருத்தப் படுவோம் என்கிறார் இவர். அதுக்கு ஆட்சியரும் பதிலுக்கு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு தெரியுமா என்கிறார்… அதற்கு இந்த நபர், உங்க பேச்ச கேட்டுதான் வெளில வந்தோம்… எங்க மக்கள் என்ன கேக்குறான் தெரியுமா? நீதான கலெக்டர் பேச்ச கேட்டு வந்த…ன்னு…. )
அதற்கு ஆட்சியர், சார்.. உங்க மக்கள் என்ன மக்கள் சார்..? என்று கேட்கிறார்.
அதற்கு அவர் பொறுப்பாளர் நாங்கதான ரெஸ்பான்சிபிள் என்கிறார்…
அதற்கு ஆட்சியர்… சார்.. நான் கூட இந்த மாவட்டம் முழுதுக்கும் ரெஸ்பான்சிபிள் சார்… இது என்னோட மாவட்டம்.. நான் தான் இதற்கு ரெஸ்பான்சிபிள்… என்கிறார்.
* யாரு என்ன பிரச்னை பண்ணாங்கன்னு எல்லா ரெகார்ஸும் இருக்கு. இப்போ நாம பாதுகாப்பா இருக்கணும். நம்ம குழந்தைங்க ஸேஃபா இருக்கணும். பாருங்க.. சின்ன பையன் பாருங்க… சின்ன பையன் அடிக்கிறதுக்கு கல்ல தூக்குறான். அவனுக்கு என்னனு தெரியும் சொல்லுங்க… சும்மா அடிக்கணும் அவ்ளோதான்.. அந்தப் பையன் பண்ணும் போது இந்தப் பையனும் பண்ணான்னு வெச்சுக்குவோம். ஒரு கேஸு.. .லைஃப் ஸ்பாயில் ஆயிடும்.
– ஒரு மாவட்ட ஆட்சியர், இவ்வளவுக்கு பொறுமையாக சம்பந்தப்பட்டவர்களிடம் களத்தில் இறங்கி நிலைமையைப் புரிய வைக்க முயல்வது…
அதே போல், பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுக்க களம் இறங்கிய விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஊர்வலத்தினரிடமும், பொறுமையாக உங்க பூஜைகளை மட்டும் பாருங்க… மத்தத எல்லாம் நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லி, வழிபாட்டுக்கு அவர்களை திருப்பிவிட்டது….
இந்த உரையாடல் பல உண்மைகளைப் புட்டுப் புட்டு வைக்கிறது. உதாரணம், ஆவணம்! (வீடியோ உதவி : குறிச்சி நியூஸ்)