rajini who are you - 2026

அன்று, ரஜினியை “நீங்கள் யார்” என கிண்டலடித்த இளைஞன், இன்று பைக் திருட்டு வழக்கில் கைதாகியுள்ளான்.

துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் (24). இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது. வடபாகம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் விசாரணையில், துாத்துக்குடி, பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் (23), கால்டுவெல் காலனியைச் சேர்ந்த மணி (23), ஆசிரியர் காலனியைச் சேர்ந்த சரவணன் (22) ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது. இதை அடுத்து அவர்களைக் கைது செய்து போலீஸார் அவர்களிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

பைக் திருட்டு வழக்கில் கைதான சந்தோஷ், துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அப்போது, காயமடைந்தவர்களிடம் ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினியிடம், ‘நீங்கள் யார்’ என கிண்டலாகக் கேட்டு, ஊடகங்களின் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending