சென்னை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் துக்ளக்’ ஆசிரியரும், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, சோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதாவும் மருத்துவமனைக்கு சென்று சோவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த சோவின் உடல் நிலை நேற்று திடீர் என்று மோசம் அடைந்தது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.