thiruparkadal pond srivilliputhur - 2026

எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தாயாருக்கு சொந்தமான குளம் திருப்பாற்கடல் குளம். இதனை தூர் வார வேண்டும் என்று  வெகுநாட்களாக கோரி வந்தோம்.

இந்நிலையில், திருப்பாற்கடல் குளத்தை தூர் வாரி ஆழப்படுத்த சேவாபாரதி – அமைப்பின் சார்பில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்த பேசினோம். அதன்படி, குளத்தில் பூஜை எல்லாம் போட்டு இரண்டு நாட்கள் மும்முரமாக வேலைகளும் நடந்தன. மழைக்காலத்துக்கு முன்னர் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மும்முரமாக இறங்கியிருந்தோம்.

ஆனால் திடீரென வேலையை நிறுத்தச் சொல்லி உத்தரவு வந்தது. அதன் பின் வேலையும் நின்று போனது. அது முடிந்து, இப்போது மாதம் ஒன்றும் கடந்து விட்டது.

srivilliputhur mla chandrapraba - 2026இன்று எங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தில் திருப்பாற்கடலை தூர்வார அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

இதில் கொடுமை என்னவென்றால் சேவாபாரதி தூர்வார போட்ட பூஜை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரே இந்த சட்டமன்ற உறுப்பினர்தான்! எங்கே போய் முட்டிக் கொள்வதோ தெரியவில்லை!  நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டால்,  டெண்டர் விட வேண்டும் என்று அர்த்தம்தானே என ஊர் மக்கள் கேட்கிறார்களே…! எம்.எல்.ஏ., என்ன சொல்லப் போகிறார்?!

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

– ராஜா ஸ்ரீவி.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending