தென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.?

Published:

CINIMA BAK - 2026

நடிகர் சங்க தேர்தல் செல்லாது : தமிழக அரசு அதிரடி அறிவிப்பால் பரபரப்பு.

2019-2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடந்தது.

இந்த தேர்தலில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் இருந்து வருகிறது.

இதுவரை பதிவான வாக்குகள் எண்ணாமல் இருக்கும் நிலையில், வரும் 15 ஆம் தேதி, வாக்குகள் எண்ணுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது .

விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர் .

தேர்தலுக்கு தடை கோரியும், தேர்தலை ரத்து செய்ய கோரியும் மனுத்தாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமீன் வழக்கு இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது.

இதற்கு நடிகர் சங்க தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்,வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

இதையடுத்து நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமீன் தரப்பினருக்கு அவகாசம் வழங்கும் வகையில் வழக்கை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி கல்யாண சுந்தரம், அன்று அவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைத்தாலும், இல்லாவிட்டாலும், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கானது நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், விஷால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் வாதாடினார்.

அப்போது, விஷால் தரப்பில் கடந்த ஜுன் 23 ம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும் பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என வாதிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிப்பது தொடர்பாக, கடந்த 5ம் தேதி தமிழக அரசு, தற்போதைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியதாகவும் சுட்டிக்காட்டினார்..

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது எனவும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு தலையிடவில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் 18 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related articles

Recent articles

spot_img