கிராம மக்களை குறிவைத்து வங்கி கடன் மோசடி! அறிவுறுத்தும் காவல்துறை!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
ban fraud e1572323495403 - 2026

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் தற்போது கிராமத்து மக்களை அதிக அளவில் குறிவைத்து செயல்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரபலமான நிதி நிறுவனங்களில் இருந்து பேசுவதாகக் கூறி தொலைபேசி மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்ளும் கும்பல் ஒன்று வங்கிகள், நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு கடன்பெற்றுத் தருவதாக கூறி வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களை சேகரித்து அதன்மூலம் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை நூதன முறையில் திருடி வருகிறது.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் வேங்கைவாசல் பகுதியில் போலி கால்சென்டர் அமைத்து வாடிக்கையாளரிகளிம் பேசி நூதனமுறையில் பண மோசடி செய்த விழுப்புரம் மணிகண்டன் உட்பட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

rraud - 2026

இது குறித்து வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவலர் கூறியதாவது: துணிக்கடை, நகைக்கடை, வணிக நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களின் எண்களை இந்த மோசடி குழுவினர் பணம் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர்.

அதன் பின்னர், போலி கால்சென்டர் அமைத்து அதில் இனிமையாக பேசும் பெண்களைக் கொண்டு குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக பொதுமக்களிடம் பேச வைக்கின்றனர். வாடிக்கையாளர்களின் மனநிலைக்கு ஏற்ப தொடர்ந்து இவர்கள் அழைக்கின்றனர். இதில், 20 சதவீதம் பேரின் வங்கி தகவல்களை பெற்று, அடுத்த சில விநாடியே பணத்தை திருடி விடுகின்றனர்.

தற்போது இந்த கும்பல் டெல்லிக்கு இடம் பெயர்ந்து அங்கு போலி கால்சென்டரை அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கும்பல் தமிழகத்தில் குறிப்பாக கிராம மக்களை குறி வைத்து செயல்படுகிறது. இவர்களை விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

hacker - 2026

கடன் வாங்கித் தருவதா கவோ, கிரெடிட் கார்டு லிமிட்டைஅதிகப்படுத்தி தருவதாகவோ, ரிவார்டு பாயின்ட் வந்திருப்பதாகவோ, வேலை வாங்கி தருவதாகவோ கூறினால், தங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்களையும் ரகசிய குறியீட்டு எண்களையும் தெரிவிக்கக்கூடாது.

மேலும் தனிநபர் ஒருவரின் வங்கிக்கணக்கின் விவரங்களை ஒருவர் கேட்கிறார் என்றாலே அது மோசடிக்காகத்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறையேனும் ரகசிய குறியீட்டு எண்ணை மாற்ற வேண்டும். எந்த இணைய இணைப்பையும் தேவையின்றி பதிவிறக்கம் செய்யக் கூடாது என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.