
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கொடுத்த அழுத்தத்தால்தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது என்றும், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது எனவும் கூறினார்.
மேலும் திமுக தலைவா் முக.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறுவேன் என கூறியதை குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என, திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கட்சி தொடர்பான முடிவுகளை தைரியமாக எடுப்பது தொடர்பாகவே சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் கூறியதாகவும், திமுகவில் ஜனநாயகம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கனிமொழி குறிப்பிட்டார்.