
இலக்கியப் பேச்சாளரும் காங்கிரஸ்காரருமான நெல்லை கண்ணன், அண்மையில் ஒரு இதழின் இணையத்துக்கு அளித்த வீடியோ பேட்டியில், பிரதமர் மோடி குறித்தும், வள்ளுவருக்கு காவி உடை சர்ச்சை குறித்தும் சில கருத்துகளைக் கூறினார். அவரது பேச்சு அதிர்ச்சி அளித்துள்ளதாகவும், கடுமையான காழ்ப்பு உணர்ச்சியில் பேசுவதாகவும், அவருக்கு சமூக வலைத்தளங்களிலும், அரசியல் மட்டங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களில் நெல்லை கண்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கருத்துகளைப் பகிர்ந்தனர். அவற்றில் ஓரிரு கண்டனங்கள்….
இந்த நெல்லை கண்ணன் பேசுவது போல் ஒரு வீடியோ பார்த்தேன். அவர் பெரியாரும் கருணாநிதியும் தான் தமிழ்நாட்டை வளர்த்தவர்கள் என்று கூறுகிறார். இது சரியா? திமுக ஆட்சியில் ஒரு சிலர் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை பணம் பார்த்தனர். ஒரு சிலர் உயர் பதவிகளும் பெற்றனர். ஆனால் விவசாயிகளின் விளைநிலங்கள் மற்றும் ஏரிகுளம், வாய்க்கால் கோயில் சொத்துக்கள், மலைகள், காடுகள் அனைத்தும் காணாமல் போயிவிட்டன. வருங்கால சந்ததிகளுக்கு எதையும் வைக்கவில்லை. 80% மக்கள் வறுமையால் வாடுகின்றனர். விழுப்புரம் புது பஸ்டாண்டு பெரிய ஏரியை சுற்றிலும் பத்தாயிரம் ஏக்கர் செழிப்பான மன்னர்கள் உருவாக்கிய விளைநிலங்கள் காணாமல் போயிவிட்டது.

அன்புள்ள நெல்லை கண்ணனுக்கு,
நெல்லைக்கும் தமிழுக்கும் நீங்கள் ஒரு களங்கம். சமீபத்திய நக்கீரன் பேட்டி உங்கள் அக இருட்டை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஒரு நிமிடம் கூட முழுமையாக பார்க்க முடியாத அளவுக்கு காழ்ப்புணர்ச்சியை உமிழ்ந்துள்ளீர்கள்.
நீங்கள் சார்ந்த சைவ சித்தாந்த கழகம் வெளியிட்டுள்ள 1965க்கு முந்தைய திருக்குறள் பதிப்புகளை முதலில் புரட்டி பாருங்கள்.
குறள் தெரியும் என்று சொல்ல பரிமேலழகர் உரையை படித்திருக்க வேண்டும். உவேசா நூலக வேளியீட்டைப் புரட்டி பார்க்கவும்.
திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்ட நவ பாரதி பிரசுரத்தின் திருக்குறள் நூலைப் பார்க்கவும். திரு நெல்லையப்பன் அவர்களின் அச்சகத்தால் வெளியிடப்பட்ட திருக்குறள் (1920)நூலை நன்றாக பார்க்கவும்.
இவ்வளவு வெறியோடு பேசும் நீங்கள், வள்ளுவனுக்கு மதச்சாயம் பூசக்கூடாதென்று கொக்கரிக்கும் நீங்கள் வள்ளுவன் கிறிஸ்தவன் என்ற ஆய்வுக்கு என்ன எதிர்ப்பு தெரிவித்தீர்கள். (வாயைத்திறக்க வில்லை. நன்றி விஸ்வாஸம் போலும்) என்ன எக்கத்தாளம் என்ன காழ்ப்புணர்ச்சி! ஜாதி வெறி. போலித்தனம். பேதைமை. இவை அனைத்தும் உங்கள் பேச்சில் வெளிப்பட்டது.
ஆழ்வாருக்கு ஜாதி வர்ணம் பூசி, அவரு நம்மாளுவே என்று ஒரு இடத்தில் வன்முறையை தூண்டுகிறீர்கள். இன்னொரு இடத்தில் நீங்களாகவே கற்பனை செய்து வள்ளுவனுக்கு ஜாதி புகட்டி வெறியை வெளிப்படுத்துகிறீர்கள்.
உங்கள் திராவிட சகவாசத்தை இந்த பேட்டி வெளிக்கொண்டு வந்துள்ளது. கருணாநிதி யிடம் பணம் பெற்று தேர்தலில் நீங்கள் தோற்றீர்கள் என்ற குற்றச்சாட்டு உண்மை என்றே தோன்றுகிறது.
@H Raja அவர்களுக்கு சவால் விட்டீர்களாமே. நான் வருகிறேன். விவாதிக்க தயாரா? நெல்லை சங்கீத சபை, பொருநை இலக்கிய வட்டம், சைவ சித்தாந்த கழகம், கம்பன் இலக்கிய சங்கம் இல்லை வள்ளுவர் கோவில் சென்னை, வாருங்கள் விவாதிக்கலாம்.
எந்த பார்ப்பன் ஐய்யா உம் சோற்றை பிடுங்கினான். முழுக்க முழுக்க கற்பனையால் வளர்க்கப்பட்டது உங்களுடைய காழ்ப்புணர்ச்சி.
நெற்றியில் இருக்கும் திருநீற்றை அழித்து விடும். உங்கள் எஜமானர்கள் சந்தோஷப்படுவார்கள்.
எழுத்தாளரும் சமூக சிந்தனையாளருமான அரவிந்தன் நீலகண்டன், தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்து…
மதிப்பிற்குரிய திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு,
திரு.நெல்லை கண்ணன் என்கிறவர் தம்முடைய பேச்சில் நம் பாரத பிரதமர் முதல் பலரை மிக கீழ்த்தரமாக பேசுவதுடன் ஒரு குறிப்பிட்ட சாதியை வன்மத்துடன் பேசுகிறார். மாநில அரசின் அமைச்சரை நாய் என்றெல்லாம் ஏக வசனத்தில் குறிப்பிடுகிறார். இவர் உங்கள் நண்பர் என கேள்விப் படுகிறேன். இவர் மீதான நீதி நடவடிக்கைகளுக்கு எதிராக தங்கள் செல்வாக்கை எவ்விதத்திலும் பயன்படுத்த மாட்டீர்கள் என்றும், நட்பு, இனப்பற்று ஆகியவற்றுக்கு மேலாக அடிப்படை மனிதப்பண்பாடு முக்கியம் என கருதும் பண்பு கொண்டவர் நீங்கள் என நம்புகிறேன். ஏற்கனவே தரம் கெட்டு கீழே விழுந்து வரும் தமிழ்நாட்டின் பொதுப்பேச்சு பண்பாட்டில் வழிகாட்ட வேண்டியவர்கள் ஆபாச பேச்சுகள் மூலம் பொதுப்பண்பாட்டை சீர்குலைப்பவர்களுக்கு எவ்விதத்திலும் துணை போக மாட்டார்கள். நீங்கள் அப்படிப்பட்ட வழிகாட்டியாக இருப்பீர்கள் என கருதுகிறேன். Muthaiah Marudhavaanan