J K SRINAGAR - 2026

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது.

மேலும், மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இந்த அறிவிப்புக்கு பின்னர் அங்கு பெரிய அளவிலான போராட்டம் வெடித்ததால் பாதுகாப்பு காரணங்களால் ரெயில் மற்றும் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலயில், நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில் சேவைகள் 99 நாட்களுக்கு பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது

.இதற்கு முன்னோட்டமாக மத்திய காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-பட்காம்- பாரமுல்லா ரெயில் பாதையில் அதிகாரிகள் இன்று தண்டவாளங்களை பரிசோதிக்கும் வகையில் சோதனை ஓட்டம் நடத்திப் பார்த்தனர்.

ஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் மட்டும் வரும் 16-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ம் தேதி ரெயில் சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending