
விவேகானந்தர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்… டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் கட்டண உயர்வு மற்றும் ஆடை கட்டுப்பாடுகளை கண்டித்து பல்கலைகழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்திலிருந்த விவேகானந்தர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள், இந்துத்வா அமைப்புகளை கண்டித்து சில வாசகங்களையும் எழுதிச் சென்றுள்ளனர்.

பல்கலைகழகத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், துணை வேந்தருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு அடுத்த நாளே சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.