love jodi
love jodi

கொரோனாவை ஒட்டி நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இன்னிலை ஊரடங்கை போலீசார் ஆளில்லா விமான கேமரா மூலம் இதனை கண்காணிக்கின்றனர்.

அவ்வாறு கண்காணிக்கும் பொழுது அதில் தைல மர தோப்பில் இருந்த காதல் ஜோடி சிக்கியது இந்த ஜோடி தலைதெறிக்க தப்பிய ஓடி காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஊரடங்கு உத்தரவில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு துணை பொது சூப்பிரண்ட் ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஆளில்லா விமான கேமராவை பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளி கிராமம் அருகே உள்ள தைல மர தோப்பில் நேற்று மதியம் உச்சிவெயிலில் காதல் ஜோடி ஒன்று தனிமையில் இருந்தனர். இது கேமரா மூலம் கண்டறியப்பட்டது அப்போது அந்த கேமராவை பார்த்தவுடன் காதலன் ஹெல்மட்டை போட்டுக்கொண்டார் அந்த இளம்பெண் காதலன் மடியில் இருந்து வேகமாக எழுந்து துப்பட்டாவால் தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.

பின்னர் அந்த காதல் ஜோடியினர் அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு தலைதெறிக்க ஓடினர் ஒருவழியாக காதலியை பின்னால் அமர்த்தி வண்டியை கிளப்பி சென்றார் காதலர். ஊரே அடங்கி இருக்கும்போது தைல மர தோப்பின் உச்சிவெயிலில் காதலர்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

அதேபோல் சேகண்யம் ஏரிக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் ஆளில்லா விமானத் கேமரா பறந்து வருவதை கண்டு தப்பிச்சென்ற காட்சிகள் கும்மிடிப்பூண்டி போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending