கொரோனா குறித்து விழிப்புணர்வு ஓவியம் தீட்டிய பள்ளி மாணவ மாணவிகள்!!

corona art
corona art

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின்படி, துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை சரவணக்குமார் தலைமையில், மாவட்ட அலுவலர் மதுரை கல்யாணகுமார் முன்னிலையில், கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் நடைபெற்றது

இதில் ஆர்வத்துடன் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்தன. மதுரை மாவட்டத்திலுள்ள தல்லாகுளம் அனுப்பானடி திருமங்கலம் மதுரை டவுன் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தில் உள்ள 14 தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்களில் பிரிவு-(A- பிரிவு 10 வயதிற்கு உட்பட்டவர்கள்-99) (பிரிவு -B -15 வயதுக்கு உட்பட்டவர்கள்-83) மொத்தம் 182 மாணவ மாணவியர்கள் ஓவிய போட்டியில் கலந்து கொண்டார்கள்.

corona art
corona art

ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும், துணை இயக்குனர் தென் மண்டலம் மதுரை- அவர்களால் வழங்கப்பட்டது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending