முழு ஊரடங்குதான்… ஆனா வீட்டையே கடையாக்கி… இறைச்சி விற்பனை!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை
madurai gorippalayam
madurai gorippalayam

மதுரை நகரில் முழு ஊரடங்கு என்ற நிலையில், இறைச்சிக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், கள்ளத்தனமாக வீடுகளில் இறைச்சி விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி, பால், மருந்தகம் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. கடைகள் அடைக்கப் பட வேண்டும் என்று மதுரை மாநகரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறைச்சிக் கடைகளும் அடைக்கப் பட்டிருந்தனர்.

எனினும், ஞாயிற்றுக் கிழமை இன்று இறைச்சி எடுப்பவர்கள் கடைகளுக்கு வருவார்கள் என்பதால், வீடுகளையே கடைகள் ஆக்கி விட்டனர் சிலர்.

மதுரை கோமதிபுரத்தில் இறைச்சிக் கடைகள் அனைத்தும், மாவட்ட நிர்வாக உத்தரவையடுத்து அடைக்கப்பட்டிருந்தாலும், இறைச்சிக் கடைக்காரர்கள் சிலர் வீடுகளில் யாருக்கும் தெரியாமல், இறைச்சி விற்பனை செய்வதாக பலர் கிசுகிசுப்பதைக் கேட்க முடிந்தது.

என்னதான் சட்டம் போட்டாலும், தடுப்பதற்கு போலீஸ் முயற்சி செய்தாலும், மக்கள் திருந்தாவரை யாருமே ஒன்றும் செய்ய முடியாது என்று பலரும் புலம்புகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.