mopa-dog

கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி அமர் குமார் பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தாவணகெரே மாவட்டத்தில் உள்ள பசவபட்ணாவைச் சேர்ந்தவர் சந்திரா நாயக். இவர் கடந்த 10-ம் தேதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இரவு 9 வயதான மோப்ப நாய் துங்காவை போலீஸார் அங்கு அழைத்து சென்று ஆய்வு செய்தனர். அங்கு மோப்பம் பிடித்த துங்கா, சுமார் 3 மணி நேரத்தில் 12 கிமீ தூரம் ஓடி சூலக்கெரேவை அடுத்துள்ள காஷிப்பூரா பகுதியில் இருந்த ஒரு வீட்டினை துங்கா நாய் வட்டமடித்தது.

இதையடுத்து, ஒருவர் பின்வாசல் வழியே தப்பியோட முயன்றார். போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் சேத்தன் என்பதும், பணத் தகராறு காரணமாக துப்பாக்கியால் தன் நண்பர் சந்திரா நாயக்கை சுட்டுக்கொன்றதையும் அவர் ஒப்புக்கொண்டார். குற்றவாளியை கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்துள்ளனர் என்றார் அவர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending