kt-rajendra-balaji-news
kt-rajendra-balaji-news

ராஜபாளையத்தில் முன்னாள் நகர்மன்றத் தலைவி தனலட்சுமி திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து டெங்கு காய்ச்சல் சமயத்தில் அயராது உழைத்தவர் என புகழ் அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், அதிமுக.,வைச் சேர்ந்த நகர்மன்ற தலைவராக இருந்த பிஎஸ் தனலட்சுமி கொரோனா தெற்றால் உயிரிழந்தார். ராஜபாளையம் நகர்மன்ற வளாகத்தில் அவரது திருவுருவப் படத்தை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்

அமைச்சர் பேசும்போது பிஎஸ் தனலட்சுமி நகர் மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ராஜபாளையம் பகுதியில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்ட காலத்தில் அயராது பாடுபட்டவர்! நான்கு அமைச்சர்கள் களத்தில் இறங்கி பணியாற்றிய பொழுது ஒரு பெண்ணாக இருந்தாலும் எங்களுடன் களத்தில் பணியாற்றியவர்.

ராஜபாளையத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் ரயில்வே மேம்பாலம் திட்ட ஆகிய பணிகளுக்கு அயராது பாடுபட்டு இந்த பகுதியில் பல திட்டங்களை கொண்டு வந்தவர் என புகழஞ்சலி செலுத்தினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending